ஸ்ரீதேவியை தாக்கும் அரசியல் பஞ்ச் வசனங்கள். ‘புலி’க்கு ஆபத்தா? திடுக்கிடும் தகவல்
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படத்தின் ரிலீஸ் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கின்றதோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
புலி’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தஞ்சையை சேர்ந்த குறும்பட இயக்குனர் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில்தான் புலி’ ரிலீஸின் தலைவிதியின் முடிவு தெரியும்.
மேலும் புலி’ படத்திற்கு இன்னும் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காததால், விநியோகிஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் பேசிய தொகையை கொடுக்க முடியாது என போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இவையனைத்தையும் விட அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று தற்போது கோலிவுட்டில் பரவி வருகிறது. ‘புலி’ படத்தில் அரசியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவியை தாக்கி அதிகளவில் அரசியல் வசனங்கள் இருப்பதாகவும், இந்த வசனங்கள் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் வகையில் இருப்பதால் ஆளுங்கட்சியின் தலைமை இந்த படம் குறித்து அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.