புனே நகரத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த செக் பாக்ஸில் இருந்து செக்குகளை திருடி பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புனே நகரில் தேவராஜ் ரெட்டி என்ற தொழிலதிபர் ஏரவாடா என்ற பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த செக் போடும் பாக்ஸில் ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.10,000 மதிப்புள்ள இரண்டு செக்குகளை போட்டுள்ளார். அவர் செக்குகளை அவசரத்தில் கிராஸ் செய்யாமல் போட்டுவிட்டாராம். இதை கவனித்த மர்ம நபர் ஒருவர், அவர் சென்றதும் செக் பாக்ஸை உடைத்தை இரண்டு செக்குகளையும் திருடி விட்டு சென்றுவிட்டான்
பின்னர் அந்த மர்ம மனிதன் ரூ.10,000 மதிப்புள்ள செக்கை காரடி என்ற பகுதியில் உள்ள வங்கிக்கிளையிலும், ரூ.1.5 மதிப்புள்ள செக்கை சேனாபட்டி பாபட் சாலையில் உள்ள கிளையிலும், பணமாக மாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செக்கை திருடி மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் மூலம் அந்த நபர் யார் என்று அடையாளம் தெரிந்துவிட்டதாகவும், மிக விரைவில் அந்த நபரை பிடித்துவிடுவோம் என்று போலீஸார் கூறினர்