ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: தோனியின் புனே அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் புனே அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற புனே அணி, டெல்லி அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி, 19.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹேனே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
இன்று ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன.