புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி. கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தியது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி சொந்த மைதானத்தில் புனே அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தை அந்த அணி தக்க வைத்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற புனே அணி முதலில் கொல்கத்தாவை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. இதனையடுத்து காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து கொல்கத்தா 155 ரன்கள் எடுத்தது. எனவே வெற்றி பெற 156 ரன்கள் தேவை என்ற இலக்குடன் புனே களமிறங்கியது.
திரிபாதியின் அதிரடியால் புனே அணியின் ஸ்கோர் மிக வேகமாக இலக்கை நெருங்கியது. கடைசியில் 19.2 ஓவர்களில் புனே அணி 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 93 ரன்கள் எடுத்த திரிபாதி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.