ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 100 பிரம்படி தண்டனை. இந்தோனேஷியாவில் புதிய சட்டம்.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 100 பிரம்படி தண்டனை. இந்தோனேஷியாவில் புதிய சட்டம்.
indonesia
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் பொது இடத்தில் நூறு பிரம்படி கொடுக்கும் தண்டனையை இந்தோனேஷிய அரசு இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் நூறு பிரம்படி மட்டுமின்றி இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு நூறு மாத சிறை தண்டனையோ, அபராதமாக அரசுக்கு ஒரு கிலோ தங்கமோ வழங்க வேண்டி வரலாம் என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள அசே என்ற மாகாணத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பிரிவினைவாதிகள் போரை நிறுத்துவதற்காக அரசுடன் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தில், இந்தோனேசியாவிலேயே முதல்முறையாக இஸ்லாமிய சட்டமான ஷரியாவை இங்கு நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அன்று முதல்  கள்ளத்தொடர்பு வைத்திருப்போருக்கு பிரம்படி தண்டனையும், சூதாட்டம், மது அருந்துவது ஆகிய குற்றங்களுக்கும், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வராதவர்களுக்கும், மற்றும் இறுக்கமான உடைகளை அணியும் பெண்களுக்கும் பொது இடத்தில் வைத்து சாட்டையடி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நாட்டின், மத்திய அரசின் தலையீட்டால், கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்பவர்களை சாகும்வரை கல்லால் அடிக்கும் தண்டனை வழங்கப்படுவது சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இந்நாட்டின் மத்திய அரசு சட்டத்தைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்கு உரிய குற்றமாக இல்லை. ஆனால் இந்தத் தண்டனைகள் மக்களை ஒழுங்கான முறையில் வழிநடத்தவே கடைபிடிக்கப்படுவதாக ஷரியாவின் தலைவர் சியாரிசால் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத ஒரு சதவிகித மக்கள், தங்களின் விருப்பப்படி இந்தோனேசியாவின் மத்திய அரசின் சட்டத்தையோ அல்லது அசே மாகாணத்தின் சட்டத்தையோ பின்பற்றும் உரிமையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

English Summary: Gay Sex is Now Punishable With 100 Lashes in Indonesian government

Leave a Reply