மது குடித்தால் தண்டனை. உறுப்பினர்களுக்கு அரசியல் கட்சி இட்ட கட்டளை

மது குடித்தால் தண்டனை. உறுப்பினர்களுக்கு அரசியல் கட்சி இட்ட கட்டளை
china party
சீனாவில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி 88 மில்லியன் உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த கட்சியின்  பொலிட் பீரோ நேற்று புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி  கோல்ஃப் விளையாடுவது, அளவுக்கு அதிகமாக உண்ணுதல் மற்றும் மது அருந்துதல் இனி கட்சி ஒழுக்கத்தை மீறிய செயலாகவே கருதப்படும் என்றும் இதற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த விதிமுறைகள் தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த விதிமுறைகள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோல்ஃப் ஆட்டம் நிறைய பணத்துடனும், மேற்கத்திய நாட்டினரின்  பழக்க வழக்கங்களுடனும் ஒப்பிடப்பட்டு வரும் சீனாவில்,  தற்போது அவற்றுக்கு கட்சி மட்டத்தில் தடை  விதிக்கப்பட்டுள்ளது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply