ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப், டெல்லி அணிகள் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப், டெல்லி அணிகள் அபார வெற்றி

Kings XI Punjab Glenn Maxwell (R) plays a shot as Rising Pune Supergiants captain Mahendra Singh Dhoni looks on during the 2016 Indian Premier League (IPL) Twenty20 cricket match between Rising Pune Supergiants and Kings XI Punjab at The Punjab Cricket Association Stadium in Mohali on April 17, 2016 ------IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE------ / AFP PHOTO / SAJJAD HUSSAIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

நேற்றைய முதல் ஆட்டத்தில் தோனியின் புனே அணியுடன் மில்லரின் பஞ்சாப் அணி மோதியது. டாஸ் வென்ற புனே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதேபோல் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. ஆனால் 19.1 ஓவரில் டெல்லி அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டீ காக் 108 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

Leave a Reply