ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை அணி படுதோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை அணி படுதோல்வி

cricket1ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியிடம் மும்பை படுதோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிரங்கிய பஞ்சாப் அணி, கேப்டன் முரளி விஜய் மற்றும் சாஹா ஆகியோர்களின் அபாரமான ஆட்டத்தால் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பஞ்சாப் அணியின் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளும், கொல்கத்தா மற்றும் புனே அணிகளும் மோதுகின்றன.

Leave a Reply