பள்ளியை சுத்தம் செய்யும் பெண்ணின் மகன், முதல்வரை தோற்கடித்தாரா?

அரசு பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் ஒரு பெண்ணின் மகன் முதலமைச்சரை தேர்தலில் தோற்கடித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்தீவ் கவுர் என்பவர் அரசு பள்ளியை சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். இவரது மகன் லப்சிங் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ள நிலையில் சமீபத்தில் அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது

அவர் பஞ்சாப் மாநில முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்

அரசு பள்ளியை சுத்தம் செய்யும் பெண்ணின் மகன் முதலமைச்சரை தேர்தலில் தோற்கடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது