இயற்கை, பேராண்மை போன்ற வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வரும் புதிய படம் புறம்போக்கு. இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, கார்த்திகா, ஷாம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறை சம்பந்தப்பட்டவைகளாக இருப்பதால் சென்னை பின்னி மில்லில் சிறை போன்ற பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஆர்யா, சிறைக்கைதியாகவும், ஷாம் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஜனநாதன் புறம்போக்கு என்னும் படத்தின் தலைப்பை ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்று மாற்றியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கார்த்திகா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் ஜனநாதன் கூறியுள்ளார்.