பூனைக்கு மணி கட்டிவிட்டேன். புயலாகிறார் புஷ்பா
அதிமுக தலைமை பேச்சுக்கு எந்த எதிர்ப்பேச்சும் பேசாமல் தலையாட்டுபவர்களைத்தான் இதுவரை தமிழக மக்கள் பார்த்துள்ளார்கள். ஆனால் தலைமையை எதிர்த்து முதல்முறையாக பாராளுமன்றத்தில் பேசும் நபர் ஒருவரை அதிமுக தொண்டர்களும், தலைவர்களும் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கின்றார்கள்.
தன்மீது பல்வேறு வழக்குகள் குவிந்து வரும் நிலையில் சசிகலா புஷ்பா தைரியமாக இருப்பது ஆளுங்கட்சி வட்டாரத்தை அதிரச்செய்துள்ளது. கண்டிப்பாக புஷ்பாவுக்கு பின்னால் யாரோ ஒரு விஐபி இருக்க வேண்டும் என்பதுதான் அந்த சந்தேகம்.
இந்நிலையில் புஷ்பா சமீபத்திய பேட்டி ஒன்றில், “அ.தி.மு.க என்பது அடிமைகள் கூடாரம். நான் அதில் இருக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தது ஒரு பெண்ணைக் கஷ்டப்படுத்துவதற்காகத்தானா?
அ.தி.மு.க-வில் ஆளை அடிப்பது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று நடப்பது வழக்கமானதுதான். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது பிரச்னையாக இருந்தது. நான் கட்டிவிட்டேன். அ.தி.மு.க-வில் அதேநேரத்தில் பலரும் இப்போது சந்தோஷமாக உள்ளார்கள். அதேநேரத்தில் பலர் பயந்துபோய் உள்ளனர். நான் அப்படிப் பயப்படும் குடும்பத்தில் இருந்தும் பயப்படும் சமுதாயத்தில் இருந்தும் வரவில்லை. என்னைக் கட்சியைவிட்டு நீக்கியதால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. அ.தி.மு.க-வுக்குத்தான் நஷ்டம்’ என்று தற்போது புதியதாக சாதி அரசியலையும் கையில் எடுக்கின்றார்.
எத்தனையோ பெரிய பெரிய தலைகளை எல்லாம் எளிதில் உருட்டிய மேலிடத்திற்கு இதெல்லாம் தூசு என்று சொல்கின்றனர் அதிமுகவுக்கு நெருக்கமானவர்கள்