எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை

தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி வாங்காவிட்டால் எரிவாயு குறித்த அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் எனவும் ரஷிய அதிபர் விளாடிமிர் கூறி உள்ளார். இன்று முதல் இது அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல்ம் எரிவாயு பரிவர்த்தனைக்காக ரஷிய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும் என்றும் அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இந்த அறிவிப்பால் ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன