கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனருக்கு ரஷ்ய அதிபர் புதின் விருது

கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனருக்கு ரஷ்ய அதிபர் புதின் விருது

putinநெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வெற்றிகரமாக இயங்கி வரும் அணுமின் நிலையத்தின் இயக்குநர் ராமையா சண்முக சுந்தர் அவர்களுக்கு ரஷியா அரசின் நட்பின் ஒழுங்கு (Order of Friendship) என்ற இந்த விருதினை வழங்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் நேற்று உத்தரவு ஒன்ரில் கையெழுத்திட்டார். இந்த விருது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை தேடி தந்துள்ளதாக கூறப்படுகிறது. கூடங்குளம் அணுமின் திட்டத்தில் சுந்தருடைய பெரும் பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப் என்ற விருது ரஷ்யாவில் கடந்த 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி, ஒத்துழைப்பு, நட்புணர்வு, புரிந்துணர்வு ஆகியவைக்கு பாடுபட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிருவாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய அணுமின் நிலையமாகும். இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் 1988 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply