கிழக்கு உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் திடீர் அழைப்பு.

putinநேற்று முன் தினம் மலேசிய ஏர்லைன்ஸ் MH17 என்ற விமானம் ஏவுகணை ஒன்றினால் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து கிழக்கு உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டை நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் இன்று திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் செல்லும் வழியில் கிழக்கு உக்ரைனில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு அதிபர் புதின் ஆதரவும், ஆயுதங்களும் தருவதால்தான் இதுபோன்ற விபரீத சம்பவம் நடப்பதாக அதிபர் புதின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இதனால் அதிர்ச்சி அடைந்த புதின் உக்ரைன் அரசு படையினருக்கும், ரஷ்ய ஆதரவு படையினர்களுக்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்திக்கொள்ள இன்று திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய புதின், ”மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது மிகவும் மோசமானது, துயரமானது. கிழக்கு உக்ரைனில் நடப்பதை மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் கவனித்து கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் வெகு விரைவில் சண்டையை நிறுத்தி விட்டு சமரச பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்” என்றார்.

Leave a Reply