சர்வதேச நீதிமன்றத்தில் புதின் மீது வழக்கு. MH17 விமானத்தில் பலியானவர்களின் உறவினர்கள் முடிவு.

Putin may be personally sued by families of MH17 victimsகடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசிய விமான MH17 கிழக்கு உக்ரைன் நாட்டில் ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த தாக்குதலுக்கு முழுக்காரணம் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் என்ற கூறும் பலியானவர்களின் உறவினர்கள், அதிபர் புதின் மீது நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

பிரிட்டன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வரும், பலியானவர்களின் உறவினர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விரைவில் பதிவு செய்ய உள்ளனர். பலியான ஒவ்வொருவரும் மில்லியன் கணக்கான டாலர்கள் கேட்டு வழக்கு பதிவு செய்ய முடிவு செய்திருப்பதால், இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக முடிந்தால் புதினின் அனைத்து சொத்துக்களையும் விற்றாலும் அது போதாது என்று கூறப்படுகிறது.

லண்டனை சேர்ந்த மெக்கூ அண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் புதின் மீது வழக்கு தொடர ஆலோசனை நடந்து வருகிறது.

Leave a Reply