ரஷியா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும். புதின் உறுதி
உலகில் எந்த நாடு அணு ஆயுதம் தயாரித்தாலும் அதற்கு முதல் ஆளாக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஷியா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் என்றும் ஆனால் அதை ஒருபோதும் தவறாக பயன்படுத்த மாட்டோம் என்றும் அணு ஆயுத நாடாக விளங்கி வரும் ரஷ்யா, அதை தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது பேட்டியில் உக்ரைன் உள்பட வேறு சில நாடுகளை இணைத்து மீண்டும் ‘சோவியத் ரஷியா’வை நாங்கள் உருவாக்க போவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன என்றும் ஆனால் மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்கம் எண்ணம் ரஷியாவுக்கு சிறிதும் இல்லை என்றும் இந்த உண்மையை யாரும் நம்ப தயாராக இல்லை என்றும் அவர் வருத்ததுடன் கூறினார்.
மேலும் உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யுனாகோவிச் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அங்குள்ள ஐரோப்பிய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவி விலகினார். இதனால் உக்ரைனில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் உக்ரைன் பிரச்சனைக்கு தேவையில்லாமல் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் புகார் கூறி வருவதாகவும் புதின் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
English Summary: Putin: Russia will continue nuclear armament but not wield ‘nuclear big stick