சர்ச்சைக்குரிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாராட்டு தெரிவித்த புதின்
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்து உள்ளதால். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய போர் விமானத்தை சமீபத்தில் துருக்கி சுட்டுத்தள்ளியதில் இருந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பனிப்போர் அதிகரித்து வரும் நிலையில் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பெரும் கண்டனங்களை பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப் அவர்களை ரஷ்ய அதிபர் புதின் நேற்று பாராட்டியுள்ளார்.
நேற்று தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ‘டொனால்ட் டிரம்ப் திறமையான, சிறப்புவாய்ந்த மனிதர் என்றும் ஆனாலும் டொனால்ட் டிரம்ப் நல்லொழுக்கம் பற்றி முடிவு செய்யவேண்டியது நாங்கள் இல்லை என்றும் அமெரிக்க வாக்காளர்கள்தான் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்குரிய முழுமையான தகுதியுடைய தலைவர் டொனால்ட் டிரம்ப் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறிய புதின் அதேசமயம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவருடன் சேர்ந்து பணியாற்ற ரஷ்யா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ‘இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Putin says Trump is ‘absolute leader’ in U.S. presidential race