ரஷ்ய அதிபர் தேர்தல்: மீண்டும் அதிபர் ஆகிறார் புதின்
ரஷ்யாவில் அதிபர் புதினின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ண தொடங்கிய நிலையில் புதின் மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணீ முடிக்கப்பட்ட நிலையில் புதினுக்கு 76 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக ரஷ்ய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் அலக்சே நவால்னி 12% வாக்குகளே பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்த வெற்றியை அடுத்து புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வது உறுதியாகிறது. தனது வெற்றி குறித்து அதிபர் புதின் கூறியபோது, ‘எனக்கு 100 வயது ஆகும் வரை நான் ஆட்சி செய்வேன்’ என்று நகைச்சுவையுடன் கூறினார்.