கார்த்தி மற்றும் நாகார்ஜுனன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. பிவிபி மற்றும் பிக்சர் மீடியா ஹவுஸ் நிறுவனங்கள் இந்த படத்தை ஏராளமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென அஜீத் பட வாய்ப்பு வந்ததும் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன. ஸ்ருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிவிபி நிறுவனம் இந்த வழக்கு முடியும் வரை ஸ்ருதிஹாசன் வேறு படங்களில் நடிக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் இந்த பிரச்சனையை சுமூகமாக பேசி முடிக்க விஜய்யின் புலி படக்குழுவினர்கள் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் பிவிபி நிறுவனத்திடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன் காரணமாக பிவிபி நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஸ்ருதிஹாசன் விஜய், அஜீத ஆகிய இரண்டு பெரிய ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வருவதால் அவர்களுடைய படத்திற்கு எவ்வித பாதிப்பும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் சங்கம் கூடுதல் அக்கறை எடுத்து இந்த பிரச்சனையை முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.