பதவி விலகும் முன் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி

பதவி விலகும் முன் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி

1பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் குவாமர் ஜாவெத் பாஜ்வா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பதவி விலகும் ரஹீல் இன்று பொறுப்புகளை முறைப்படி ஒப்படைத்தார்.

புதிய ராணுவ தளபதியாக பதவியேற்றிருக்கும் 57 வயதான குவாமர் ஜாவெத் பாஜ்வா அவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய தளபதியிடம் பதவிப்பொறுப்பை வழங்கிய பின்னர் ரஹீல் பேசியதாவது:”சமீபத்தில் காஷ்மீரில் இந்தியாவின் தீவிரவாதம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எங்களது பொறுமையை பலவீனமாக எடுத்துக் கொண்டால், அதுவே பின்னர் ஆபத்தாக முடியும். காஷ்மீர் விஷயத்தில் அமைதி காணாமல், தெற்கு ஆசியாவில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க முடியாது. இதற்கு சர்வதேச சமுதாயத்தின் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது, சீனா – பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் மூலம் தான் இந்த மண்டலத்தில் அமைதியை உருவாக்க முடியும் ” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுக்கான எல்லை பாதுகாப்புப் படைக்கு தலைமையேற்று நடத்தி வந்தவர் குவாமர் தற்போது ராணுவத்தின் தளபதியாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply