வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க தேவையான தகுதிகள்

download (2)

வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்வதற்கான அடிப்படை நல்ல ஜி.எம்.பி.ஏ., (ஜிமேட்) மதிப்பெண்களும், தேவையான அளவு ஆங்கில அறிவும் தான். வெளிநாடுகளில் எம்.பி.ஏ., சேர வேண்டுமெனில், அவர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. நல்ல அகடமிக் சாதனைகள், கம்ப்யூட்டிங் திறன், திறன்சார் நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு மொழியில் புலமை ஆகியவை முக்கிய தகுதிகள். வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க விரும்புவோர், அதற்கான முன் தயாரிப்பை, இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் போதே தொடங்கிவிட வேண்டும். நோக்க அறிக்கை (SOP) எழுதுவதில், ஒரு மாணவர், தனது பேராசிரியர், கன்சல்டன்ட் அல்லது ஏற்கனவே, வெளிநாட்டுப் பல்கலையின் சேர்க்கை நடைமுறைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அங்கே இடம் பெற்ற உங்களின் நண்பர் அல்லது முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வெளிநாட்டில் படிக்கச் செல்லுதல் என்ற நிலை வரும் போது, பெயர் பெற்ற கல்விநிறுவனத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவும். வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமெனில், அமெரிக்கா அல்லது பிரிட்டன் ஆகிய நாடுகளில்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. அங்கே படித்தால் தான், படிப்பிற்கான பயனை அனுபவிக்க முடியும் என்பதில்லை. ஆசிய நாடுகளை எடுத்துக் கொண்டாலே, அங்கே மிகச் சிறந்த கல்விநிறுவனங்கள் உள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும் போது செலவு மிகவும் குறைவதோடு, நல்ல தரமான கல்வியும் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திறன்சார் நடவடிக்கைகள்

சில கல்வி நிறுவனங்கள், extra curricular activities எனப்படும் திறன்சார் நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. திறன்சார் நடவடிக்கைகள்மூலம், ஒரு மாணவரின் பன்முகத்திறன் பற்றி, மேலாண்மை கல்வி நிறுவனங்கள்அறிந்து கொள்ள முடியும். தனியார் வணிகப் பள்ளிகள், மாணவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகளின் போது, திறன்சார் நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. பல மேலாண்மை கல்விநிறுவனங்கள், ஒரு மாணவரின் திறன்சார் நடவடிக்கைகளுக்கு தனி வெயிட்டேஜ் கொடுக்கின்றன. ஏனெனில், எம்.பி.ஏ., படிப்பு என்பது 360டிகிரி முறையிலான ஒட்டுமொத்த மேம்பாடு சார்ந்தது என்பதால்.

எனவே, திறன்சார் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டு, அதற்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தாட்சிகளைக் கொண்டிருக்கும் மாணவர்கள், எம்.பி.ஏ., படிப்பில் சேர்வதற்கான நேர்முகத்தேர்வின் போது முக்கியத்துவத்தைப் பெற்று, தங்களுக்கான இடங்களை உறுதி செய்யும் வாய்ப்புகள் மிக அதிகம். ஏனெனில், வெறும்பாட மதிப்பெண்களின் மூலமாக ஒருவர் நடைமுறை வாழ்வின் சிக்கல்களை எதிர் கொள்ளும் திறன்களையும், மனோதிடத்தையும் பெற்றுவிட முடியாது என்பதும், அதன் மூலமாக மட்டுமே ஒரு மாணவரின் அறிவை சோதனையிட முடியாது என்பதும் பல உயர்கல்வி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

Leave a Reply