மான்செஸ்டர் குண்டுவெடிப்பு. பலியானவர்களுக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய ராணி எலிசபெத்
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்று கொண்டிருந்த போது தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததால் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாகினர். 50க்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகியும் இன்னும் ஒருசில குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காக இங்கிலாந்து ராணி எலிசபெத் இன்று பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு ஒருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார். அவருடன் எலிசபெத் கணவர் பிலிப் மற்றும் இளவரசர் வில்லியம் அவர்களும் உடன் இருந்தார்.
இந்த வெடிகுண்டு சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாகவும், நிலைமையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செவ்வனே எடுத்து வருவதாகவும் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.