வெட்கம், மானம், சூடு, சொரணை, உள்ளவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். ஆர்.ஜே.பாலாஜி
பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி சென்னை வெள்ளம், மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகிய விஷயங்களில் துடிப்பாக செயல்பட்டதால் இளைஞர்களின் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதிகளை நகைச்சுவையாக வறுத்தெடுத்தார். அவரது பேச்சின் வீடியோ ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் பேசியதாவது: ‘மூன்று மாதம் நிறைய விஷயத்த பார்த்தாகிவிட்டது. இங்க வந்து காமடியா பேசுங்கனு 15 நிமிஷம் பேசுங்கனு சொன்னார்கள். இன்றைய சூழ்நிலையில காமெடின்னு பார்த்தா புதிய தலைமுறை , தந்தி டிவி யை சொல்லனும்
அரசியல் என்பது ஆசை இல்லை அது அழிவு தான். நான் இளைஞர்களை அரசியலுக்கு வர தூண்டுவதாக சொல்கிறார்கள் . நான் யாரையும் அசிங்கமா பண்ண தூண்டிவிடலை. வெட்கம் வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம், சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். ” என்று அவர் பேசியுள்ளார்.