‘தென்னாட்டான்’ ஆக மாறிய ஆர்.கே.சுரேஷ்
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் ஏற்கனவே சுமார் ஐந்து படங்களில் ஹீரோவாகவும், ஒருசில படங்களில் வில்லனாகவும் நடித்து வரும் நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது.
இந்த படத்திற்கு ‘தென்னாட்டான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிராமத்து கதை அம்சம் கொண்ட இந்த படத்தை விஜய்பாண்டி என்பவர் இயக்க, திவிஷ்யா ரேஷ்மா சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
பக்கா கிராமத்து இளைஞர் கேரக்டரில் நடிக்கும் ஆர்.கே.சுரேஷ், இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கத்தி, அரிவாளுடன் மிரட்டியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் தொடங்கவுள்ளதாகவும், அடுத்த வருடம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.