ஸ்ரீமாகாளீஸ்வரர் திருக்கோயில்: ராகு -கேது மனித உருவில் காட்சி தரும் ஒரே கோவில்.

p82 காஞ்சிபுரம்- ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறம்,  ஜவஹர்லால் தெருவில் உள்ள ஸ்ரீமாகாளீஸ்வரர் திருக்கோயில், ராகு- கேது பரிகார தலமாக திகழ்கிறது. ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதற்கு ஏற்ப, இந்த கோயிலில் இருந்து ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் குமரக்கோட்டம் கோயில்களின் கோபுரங்களைத் தரிசிக்கலாம்.

ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிற்து ஸ்தல புராணம். அவர்களுக்கு பாவ நிவர்த்தி கிடைத்த இந்த கோயிலுக்கு வந்து ஸ்ரீமாகாளீஸ்வரரைத் தொடர்ந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்குவதோடு, கால ஸர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன்  அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம்!

p82bஇங்கே ராகுவும் கேதுவும் மனித உருவில் காட்சி தருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில், ராகு காலத்தில் இங்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் மூலவரைச் சுற்றி அமைந்துள்ளனர். ஸ்தல விருட்சமான வன்னி மரத்தடியில் ஸ்ரீவிநாயகர் அருள்பாலிக்கிறார். தோஷ நிவர்த்திகளுக்காக இங்கு நாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. 

Leave a Reply