அகதிகளால் மானபங்கம் செய்யப்பட்ட 500 ஜெர்மனி பெண்கள். பிரதமர் ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை
ஜெர்மனி புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுமார் 500 பெண்கள் வரை மானபங்கம் செய்யப்பட்டதாகவும் இதனால் அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெர்மனிக்கு அகதிகளாக வந்தவர்களே பெரும்பாலும் மானபங்கத்தில் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிரியா, இராக், ஆப்கானிஸ் தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாக சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஜெர்மனியில் குடியேறி உள்ளனர். இந்நிலையில் மேற்கு ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. உள்ளூர் மக்கள் எப்போதும் போல் எல்லை மீறாமல் புத்தாண்டை கொண்டாடி வந்த நிலையில் அகதிகளாக வந்தவர்கள் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்ததாகவும், இவர்களால் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் விலையுயரந்த பொருட்களையும் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி இளைஞர்கள் சிலர் அகதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதால் பல இடங்களில் கலவரமும் வெடித்துள்ளது. இந்த விவகாரத்தால் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் கூறியபோது, சட்டத்தை மீறும் அகதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Chennai Today News: Racial tension in Germany after refugee rapists attack