தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக்கூடாதா? ராதாரவி

தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக்கூடாதா? ராதாரவி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும், ரஜினியின் நண்பருமான ராதாரவி தனது கருத்தை தற்போது செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் ஆணைபடி தான் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.

இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’ என்று கூறினார்.

ராதாரவி கூறிய இந்த கருத்து ரஜினி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது ரசிகர்களின் டுவீட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.

Leave a Reply