ராதாரவியின் ஆபாச பேச்சால் நடிகர்கள் அதிருப்தி

ராதாரவியின் ஆபாச பேச்சால் நடிகர்கள் அதிருப்தி
radharavi
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கோடம்பாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் கூட்டத்தில் ராதாரவி ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசியதோடு, கமல்ஹாசனை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் ராதாரவி பேசியதாவது: “எனது அப்பா எம்.ஆர்.ராதா நடிகர் சங்கத்துக்காகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்போதுள்ள எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கத்தின் வரலாறு தெரியவில்லை.

தற்போது ஒரு பூச்சிதான் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நான் தற்போது மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். சட்டைக்கு மேல் ஒரு பூச்சி இருந்தால் அதைத்தட்டி விட்டுவிடுவோம். அதே பூச்சி கழுத்தில் உட்கார்ந்து கடித்தால் அதை நசுக்கத்தானே செய்வோம்.

அதேபோல், ஒரு மோசமான பூச்சி எனது பேண்ட்டுக்குள் நுழைந்து கடித்தால், இங்கு எனது பேண்டைக் கழற்ற முடியாது. இங்கிருந்து வெளியே சென்றதும், அந்தப் பூச்சியைப் பிடித்து, நீதானே கடித்தாய் எனக் கூறி அதை நசுக்கிவிடுவேன். அதேபோல், 18-ம் தேதி இரவு வரட்டும், அனைவரையும் நசுக்கி விடுவேன்” என மிகவும் ஆவேசமாக கூறினார்.

மேலும் ராதாரவி பேசுகையில், ” கமலைப் பற்றி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா?  கமலும், நானும் அரை டிரவுசர் காலத்திலேயே நண்பர்கள்.இருவரும் மாறி மாறிக் கெட்டவார்த்தையில் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வோம். சினிமாவுக்கு யாரும் நிரந்தரம் கிடையாது”

Leave a Reply