பிரபல பெண் சாமியார் ராதே மா ‘செக்ஸ் பார்ட்டி நடத்தினாரா? திடுக்கிடும் தகவல்
சமீபத்தில் கவர்ச்சி உடையுடன் இண்டர்நெட்டில் புகைப்படங்களை வெளிப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண் சாமியார் ராதே மா மீது தற்போது மீண்டும் ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது தீவிர பக்தைகளில் ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியபோது, ‘பெண் சாமியார் ராதே மா, தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள தூண்டியதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பெண் சாமியார் ராதே மா மீது பல புகார்கள் இருந்து வரும் நிலையில் இந்த புதிய புகார் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. டாலி பிந்த்ரா என்ற பக்தை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: “நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் ‘சத்சங்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு என்னை வற்புறுத்தினார். ‘செக்ஸ் பார்ட்டிகள்’ போல நடைபெற்ற அந்த சத்சங் நிகழ்ச்சிகளின்போது, என்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள ராதே மா தூண்டினார். ஆண் பக்தர்களுடன் பேசும்போது, பஞ்சாபி மொழியில் ஆபாசமாக சங்கேத பாஷையில் பேசும் பழக்கம்கொண்ட ராதே மா, எனது கணவரையும் அபகரிக்க முயன்றார். இவ்வாறு டாலி பிந்த்ரா குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீது இதுவரை ஏன் புகார் தெரிவிக்காமல் இருந்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிந்த்ரா, எனக்கு நீண்ட காலமாக பிள்ளை பாக்கியம் கிட்டவில்லை. எனக்கு குழந்தை பிறக்க வழிசெய்கிறேன் என ராதே மா வாக்குறுதி அளித்திருந்ததால் அவர் மீது புகார் கூற நான் தயக்கம் காட்டி வந்தேன் என்று தெரிவித்தார்.
தற்போது, அவரது நிஜமுகத்தை நான் வெளிப்படுத்தி விட்டதால், போலீசில் நான் புகார் அளித்த நாளில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருகின்றது எனவும் டாலி பிந்த்ரா கூறியுள்ளார்.