நடிகை ராதிகா ஆப்தேவுக்கு தெலுங்கு திரையுலகம் தடை? பெரும் பரபரப்பு

radhikaதமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன், உலா ஆகிய படங்களிலும், தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களிலும் நடித்த நடிகை ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இண்டர்நெட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த ஆபாச படங்களில் இருப்பது நான் அல்ல என்றும் ‘மார்பிங்’ செய்து யாரோ வெளியிட்டுள்ளனர் என்றும் ராதிகா ஆப்தே மறுப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் ஹாலிவுட் படம் ஒன்றில் அவர் டாப்லெஸ் ஆக நடித்த வீடியோ படமும் இண்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த படத்தின் குழுவினர்களில் ஒருவரே திருட்டுத்தனமாக அந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்பட்டது. இது ராதிகா ஆப்தேவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ராதிகா ஆப்தே, தெலுங்கு திரையுலகினர்களை குறிப்பாக தெலுங்கு ஹீரோக்கள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். தெலுங்கு கதாநாயகர்களும், இயக்குனர்களும் ஆணாதிக்கம் மிகுந்தவர்கள் என்றும் பெண்களை மதிக்க தெரியாதவர்கள் என்றும் கூறினார்.

இவரது பேட்டி தெலுங்கு பட உலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் தெலுங்கு படங்களில் நடிக்க ராதிகா ஆப்தேவுக்கு வாய்ப்புகள் கொடுக்க கூடாது என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இணைந்து முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ராதிகா ஆப்தே மீது அறிவிக்கப்படாத தடை நடவடிக்கையை தெலுங்கு திரையுலகினர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply