ரஜினியின் நாயகி ஓரினச்சேர்க்கையாளரா? பெரும் பரபரப்பு

ரஜினியின் நாயகி ஓரினச்சேர்க்கையாளரா? பெரும் பரபரப்பு
radhikaap[te
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மனைவியாக குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்க ஒருபுறம் ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை ராதிகா ஆப்தே, மறுபுறம் பாலிவுட்டில் ஒரு படத்தில் ஓரினச்சேர்க்கையாளராகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் ‘கபாலி’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி ஆகிய படங்களில் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் நடித்து வந்த நடிகை ராதிகா ஆப்தே, திடீரென ஒரே நாளில் ஆபாச பட சர்ச்சை காரணமாக இந்தியா முழுவதும் டிரெண்டில் வந்துவிட்டார். அதுமட்டுமின்றி ‘அகல்யா’ என்ற குறும்படத்தில் படுகிளாமராக நடித்து இந்திய இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக கபாலி’யில் நடிக்க ஒப்பந்தமானதும் இந்திய அளவில் கூகுளில் தேடப்படுபவர்களின் பட்டியலில் முதலிடைத்தை பிடித்த ராதிகா ஆப்தே, தற்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதைப்படி ராதிகா ஆப்தே ஓரினச்சேர்க்கையாளராம். இப்போதைய நிலவரப்படி ஓரினச்சேர்க்கையாலர்களின் சவால்கள், பின்னணி எனக் கதை கூறப்படவிருக்கின்றது. ராதிகா ஆப்தேவுடன் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க  மல்லிகா ஷெராவத், ஷெர்லின் சோப்ரா உள்பட இன்னும் சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை திரைப்படமான ‘ஃபயர்’ போன்று இந்த படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Leave a Reply