விஜய்-அட்லி இணையும் படத்தின் முக்கிய வேடத்தில் ராதிகா.

radhikaஇளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவ இயக்கி வரும் ‘புலி’ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இரண்டு வித்தியாசமான வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர்கள் நடித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் அட்லி விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்த்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் வடிவேலுவும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதுகுறித்து ராதிகா தனது டுவிட்டரில் தெரிவிக்கும்போது, ‘விஜய் 59 படத்தில் இடம்பெறுவது குறித்து மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார். இளையதளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் ராதிகா இது எங்கள் நீதி’ போன்ற ஒருசில படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘பந்தயம்’ என்ற படத்தில் ராதிகா, விஜய் இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் அந்த படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply