விஜய் வசனத்தை பேசி அரங்கத்தை அதிரவைத்த ராதிகா!
கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா தற்போது தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சமீபத்திய எபிசோடில் ஒரு இளம்பெண் ராதிகாவிடம் தான் ஒரு தளபதி விஜய் ரசிகை என்றும் ‘தெறி’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நீங்கள் நடித்திருந்தது தனக்கு ரொம்ப பிடித்ததாகவும் கூறினார்.
அப்போது அந்த படம் குறித்த மலரும் நினைவுகளை கூறிய ராதிகா, அந்த படத்தில் விஜய் தன்னை ‘பாப்பா’ என்று கூப்பிடுவார் என்றும், ‘நான் சொல்ர பொண்ணைத்தான் நீ கல்யாணம் செய்துக்கணும் என்று கூறும்போது, ’அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பாப்பா’ என்று விஜய் அருமையான கொஞ்சலுடன் வசனம் பேசியிருப்பார் என்றும் ராதிகார் கூற, தளபதி விஜய்யின் வசனத்தால் அரங்கமே அதிர்ந்தது