பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் ரேடார் வேலிகள். மத்திய அரசு முடிவு

பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் ரேடார் வேலிகள். மத்திய அரசு முடிவு
rador
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து கடந்த பல வருடங்களாக ஏராளமான ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த ஊடுருவலை தடுக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஊடுருவலை முற்றிலும் தடுக்க பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் ரேடார்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்லது.

லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தின் எல்லையில் முள்வேலிகள் அமைக்க முடியாத பகுதிகளில் ஊடுருவலை தடுக்க ரேடார்கள், சென்சார்கள், கேமராக்கள், தொலைத்தொடர்பு நெட்வொர்க் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தீர்வுகளை ஒருங்கிணைக்க அரசு முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.

முதல்கட்டமாக ரேடார் மற்றும் சென்சார் அமைக்கும் பணிகள் பஞ்சாப், குஜராத் (சர் கிரேக்), தெற்கு பெங்கால், திரிபுரா, ஜம்மு பிராந்தியங்களில் ஆரம்பிக்க உள்ளதாகவும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இப்பணியை மேற்கொள்வதற்காக ஜம்மு பிராந்தியத்திற்கு 10 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பதான்கோட் சம்பவம் ஊடுருவால்தான் நடந்துள்ளதால் இதுபோன்ற இன்னொரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதை தடுக்கவே இந்த ரேடார் வேலிகள் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply