இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ராகவா லாரன்ஸ்? டுவிட்டர் கலாய்ப்புகள்
சமீபத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய தன்னலம் இல்லாத ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தை அச்சத்துடன் அரசியல் கட்சிகள் பார்த்த நிலையில் ஒருசில நடிகர்கள் இந்த போராட்டத்தின் மூலம் விளம்பரம் தேடி கொள்ள முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக ராகவா லாரன்ஸ் மற்றும் சிம்பு ஆகியோர் மாணவர்களின் போராட்டத்தின் மூலம் விளம்பரம் தேட முயற்சி செய்வதாக டுவிட்டரில் பலர் குற்றம் சாட்டினர்.
இதை உறுதி செய்யும் வகையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து திடீரென இந்த கைதுக்கு சிம்பு பொங்கி எழுந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதேபோல் முதல்வரை சந்தித்து மாணவர்களை விடுதலை செய்ய மனு கொடுத்த ராகவா லாரன்ஸ் நேற்று திடீரென தேவைப்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கும் வரத்தயார் என்று அறிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அவருடைய சுயரூபத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் ராகவா லாரன்ஸ் என்று கலாய்த்தும் டுவிட்டரில் பலர் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு ராகவா லாரன்ஸ் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்