அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய ராகவா லாரன்ஸ்

அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய ராகவா லாரன்ஸ்

kalamமுன்னாள் ஜனாதிபதியும் அணுநாயகனுமான அப்துல்கலாம் சமீபத்தில் மறைந்தபோது அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியதோடு சரி, அவருடைய கனவை நனவாக்க எந்த ஒரு திட்டமோ அல்லது நிதியுதவியோ அளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒரு புதிய படத்திற்கு கிடைத்த அட்வான்ஸ் பணமான ஒரு கோடி ரூபாயை அப்துல் கலாம் பெயரில் இயங்கும் ஒரு திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார். அவருடைய இந்த செயலை ஃபேஸ்புக், டுவிட்டரில் ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வருகின்றனர்.

‘காஞ்சனா 2’ என்ற வெற்றி படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கவுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா‘ மற்றும் ‘நாகா’ ஆகிய இருபடங்களின் தொடக்க விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இரு படங்களையும் தயாரிக்கவுள்ள வேந்தர் மூவிஸ் நிறுவனம் நேற்று ராகவா லாரன்சுக்கு அட்வான்சாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தது.

இந்த பணம் முழுவதை பெற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ், அந்த ஒரு கோடி ரூபாயையும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் செயல்படும் பசுமை திட்டத்துக்காக நன்கொடையாக வழங்கினார். ‘பசுமை‘ அமைப்பு ஏழை குழந்தைகளின் கல்விக்காக போராடி வருவதோடு, மரக்கன்றுகளை நடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ‘லாரன்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பின்மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகளின் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply