விஜய், தனுஷ், சிம்பு வரிசையில் இணைந்த ராகவா லாரன்ஸ்

விஜய், தனுஷ், சிம்பு வரிசையில் இணைந்த ராகவா லாரன்ஸ்

ragava 1இளையதளபதி விஜய், தனுஷ், சிம்பு, உள்பட பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் பாடகர்களாகவும் மாறியுள்ள நிலையில் தற்போது இந்த வரிசையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்களும் இணைந்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் ‘மொட்டசிவா கெட்டசிவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்தில் ‘லோக்கல் மாஸ்’ என்று தொடங்கும் பாடல் ஒன்றை ராகவா லாரன்ஸ் பாடியுள்ளார். பிரபல பாடகி சுசித்ராவுடன் ராகவா லாரன்ஸ் இணைந்து பாடிய இந்த பாடல் சூப்பராக வந்துள்ளதாகவும் கண்டிப்பாக இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் சிங்கிள் டிராக் ஆக நாளை வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி நாளை இந்த படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகிறது. ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், சதீஷ், ஸ்ரீமான், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய்ரமணி இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது

Leave a Reply