தரமற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்க வேண்டாம். ரகுராம்ராஜன்

தரமற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்க வேண்டாம். ரகுராம்ராஜன்

raguramதரமற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டாம் என்றும் அத்தகைய நிறுவனங்களில் படிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும்போது அவர்கள் தேர்வு செய்துள்ள நிறுவனங்கள் தரமான கல்வி நிறுவனங்கள்தானா? என்பதை வங்கிகள் ஆராய்ந்த பின்னரே கல்விக்கடன் கொடுக்க வேண்டும் என்று ரகுராம்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய ரகுராம்ராஜன், ‘மிகவும் உயர்ந்த தரத்திலான பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் மிக அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கக் கூடும். இருப்பினும் தகுதிபடைத்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

திறமையான மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது வங்கிகளின் மூலம்கிடைக்கு கல்விக் கடன். அவ்விதம் கடன் வழங்கும் வங்கிகள், அந்தத் தொகையை மாணவர்கள் திரும்ப செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அவ்விதம் படித்து முடித்த மாணவர்கள் வேறு வேலை கிடைக்காமல் கடைசியில் குறைந்த ஊதியம் கிடைக்கும் பணிக்குச் செல்ல நேரிடும். அப்போது அவர்களால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமத சூழல் ஏற்படுகிறது.

லாப நோக்கிலான கல்வி மையங்களை அடையாளம் காண வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. வெறுமனே கல்விக் கடனை வழங்கி அவர்களை கடனாளி ஆக்கி உதவாத பட்டத்தை பெற வைப்பதில் என்ன பயன் இருக்க முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

Leave a Reply