போதைப் பொருளுடன் அமெரிக்காவில் சிக்கினாரா ராகுல்காந்தி. சுப்பிரமணிய சாமியின் அதிர்ச்சி தகவல்
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என அழைக்கப்படும் ராகுல்காந்தி சமீபகாலமாக ஒவ்வொரு மாநிலமாக சென்று பொதுமக்களிடையே மோடி ஆட்சியை பகிரங்கமாக கடும் விமர்சனம் செய்து வருகிறார். இது பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில் ராகுல்காந்தியின் ரகசியம் ஒன்றை சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு பிரிவு போலீசாரிடம் 1.60 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் வெள்ளை பவுடருடன் சிக்கிக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாகவும், அதன்பின்னர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் வாஜ்பாய் தொலைபேசியில் பேசி ராகுல் காந்தியை விடுதலை செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். பிரபல இந்தி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சாமி இதனைக் குறிப்பிட்டு உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுப்பிரமணிய சாமி அதே பேட்டியில் ராஜஸ்தான் மாநிலம் முதல்வர் வசுந்தரா ராஜேவை ‘ஜான்சி ராணி’ என்று பாராட்டியுள்ளதாகவும், வசுந்தரா ராஜே தனது சொந்த திறமையால் முன்னுக்கு வந்தவர் என்றும் அவருக்கு எதிராக கிளம்பும் எந்த ஒரு சர்ச்சையையும் அவர் தனித்தே எதிர் கொள்ளும் திறன் உள்ளவர் என்றும் கூறியுள்ளார். மேலும் வசுந்தராராஜே கேட்டுக்கொண்டால் நான் அவருக்கு உதவிசெய்வேன் என்றும் ஆனால் அவருக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது,” என்றும் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.