ஒரே மேடையில் கருணாநிதி-ராகுல்காந்தி. மார்ச் 20-ல் திருச்சியில் சமூகநீதி மாநாடு
திருச்சியில் மார்ச் மாதம் 20ஆம் தேதி கி.வீரமணி தலைவராக இருக்கும் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள சமூகநீதி மாநாட்டில் திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகிய இருவரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் இந்த மாநாடு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாகவே கருதப்படுகிறது.
இந்த மாநாட்டில் பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கனவே ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனையும் நேரில் சென்று கீ.வீரமணி அழைப்பு விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தலித்துகள் பிரச்சனைகள் மற்றும் மாணவர்கள் பிரச்சனைகளில் நேரடியாக பங்கு பெற்று வரும் ராகுல்காந்தி, இந்த சமூகநீதி மாநாடில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Chennai Today News: Rahul Gandhi and Karunanidhi in Trichy meeting