உலகம் சுற்றும் மோடியால் மக்களவையில் பேச முடியாதது ஏன்? ராகுல்காந்தி

உலகம் சுற்றும் மோடியால் மக்களவையில் பேச முடியாதது ஏன்? ராகுல்காந்தி

பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றி உலகத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் 15 நிமிடங்கள் கூட பேசாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது; பிரதமர் மோடி உலகம் முழுவதும்பயணம் மேற்கொள்கிறார் ஆனால், மக்களவைக்கு வந்து 15 நிமிடங்கள் அவரால் பேசமுடியவில்லை, யாரையும் சந்திக்க முடியவில்லை. ரபேல் போர் விமானக் கொள்முதலில் 45 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த பணம் அனைத்தும் மோடியின் தொழிலதிபர் நண்பருக்குச் சென்றுவிட்டது.

பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நிலவும் பணப்பற்றாக்குறை நிலவுகிறது. மீண்டும் பணமதிப்பிழக்கத்தின் தீவிரத்தில் நாடு சிக்கிவிட்டது. பிரதமர் மோடி ஏற்கனவே கொண்டுவந்த, பணமதிப்பிழப்பு முடிவால், நாட்டின் வங்கி நிர்வாக முறையே சீரழிந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், ஏடிஎம் மையத்தின் முன் வரிசையில் நின்று இருந்தது. அது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஒவ்வொரு இந்தியரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்து ரூ.1000,ரூ.500 எடுத்து, அதை நிரவ்மோடிக்கு மோடி கொடுத்துவிட்டார். ரூ.1000 கோடிக்கும் மேல் அபகரித்துச் சென்ற நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருவார்த்தைகூட பேசவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply