விரைவில் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் ராகுல்காந்தி. பிரியங்காவுக்கு துணைத்தலைவர் பதவி?

விரைவில் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் ராகுல்காந்தி. பிரியங்காவுக்கு துணைத்தலைவர் பதவி?

sonia and rahulகாங்கிரஸ் தலைவராக இருக்கும் சோனியா காந்தியின் உடல்நிலை அவ்வப்போது பிரச்சனை செய்வதால், விரைவில் அந்த பொறுப்பை ராகுல்காந்தி ஏற்கவிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கடந்த சில நாட்களாக கூறி வரும் நிலையில் தற்போது அக்கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங் இதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தற்போது காங்கிரஸ் கட்சி சற்று வலுவிழந்து காணப்படுகிறது. அதனை மீண்டும் பலப்படுத்த, கட்சிக்குள் சில மாற்றங்களைச் செய்வது அவசியமாகும்.

ராகுல் காந்திக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. பொதுவாகவே அரசியலில் காலத்தைக் கணித்து களமிறங்குவது மிகவும் முக்கியம். அதன் அடிப்படையிலேயே ராகுல் காந்தி காத்திருக்கிறார். உரிய நேரத்தில் அவர் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்பார். அந்தத் தருணம் எப்போது? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதேபோல், பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்பது காங்கிரஸாரின் விருப்பம். ஆனால், அதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது அவர்தான். கட்சிப் பணியாற்றுமாறு அவரை நிர்பந்திக்க முடியாது’ என்று கூறினார்.

எனினும் உபி தேர்தலுக்கு முன் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராகவும், ப்ரியங்கா காந்தி துணைத்தலைவராகவும் பொறுப்பேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply