காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் ப.சிதம்பரம்
ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாக பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் மற்றும் செல்லகுமார் ஆகியோர் நிரந்தர அழைப்பாளராக இணைக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் 51 பேர் கொண்ட கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டார். கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை இந்த நிர்வாகிகள் குழு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நிர்வாக குழுவின் உறுப்பினர்களாக 23 பேர்களும், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர்களும், நியமிக்கப்பட்டுள்ளனர். வயதில் மூத்தவர்கள், இளைய தலைமுறையினர் அடங்கிய கமிட்டியாக இது அமைந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் மத்திய காரிய கமிட்டியை கலைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது