குஜராத்தை அடுத்து கர்நாடக கோவில்களில் வலம் வரும் ராகுல்காந்தி
சமீபத்தில் நடந்த குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின்போது அங்குள்ள கோவில், சர்ச்சுகள், மசூதிகளுக்கு சென்று வருவதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வழக்கமாக்கி கொண்டார். இதனால் தனது கட்சி மதச்சார்பற்ற கட்சி என்பதை அவர் சொல்லாமல் சொல்லி வந்ததாக கூறப்படுகிறது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும் பாஜகவுக்கு கடுமையான போட்டியை கொடுத்தது
இந்த நிலையில் வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வரும் ராகுல்காந்தி அங்குள்ள கோவில், சர்ச்சுகள், மசூதிகளுக்கு சென்று வருகிறார். இதனால் அவர் குஜராத் ஃபார்முலாவை இங்கும் கடைபிடிப்பதாக கூறப்படுகிறது
இதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற கோக்கர்நாதேஸ்வரா கோவில், ரோஸாரியோ சர்ச் மற்றும் உல்லால் தர்கா ஆகிய இடங்களுக்கு சென்று அந்தந்த மத வழக்கப்படி வழிபாடு செய்தார்.
Rahul gandhi followed gujarat formula in karnataka