ராகுல் காந்திக்கு ரகசிய திருமணமா? பரவி வரும் வதந்தியால் பெரும் பரபரப்பு.

rahulகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் இந்தியா திரும்பும்போது தனது மனைவியுடன் வருவார் என்றும் வட இந்தியாவில் வதந்தி கிளம்பி வருவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் செல்வதாக அறிவிக்கப்பட்டு வெளிநாடு சென்ற ராகுல்காந்தி தற்போது எங்கிருக்கின்றார் என்றே தெரியவில்லை. இதனால் ராகுலை காணவில்லை என்று உத்தரபிரதேசத்தில் போஸ்டர் அடித்து அங்குள்ள மக்கள் ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், ராகுல் காந்தி ரகசிய திருமணம் செய்துவிட்டதாகவும், தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் திரும்பும்போது அவருடைய மனைவியும் உடன் வருவார் என்றும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது

ஆனால் இந்த தகவல்களை காங்கிரசார் மறுத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி வருவதாகவும் ராகுலின் திருமணம் வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் தான் நடைபெறும் என்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 19ஆம் தேதி நடக்கும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்

Leave a Reply