காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகுல் காந்தியை ஓரங்கட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களே தீவிர முயற்சியில் ஈடுபடுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பேனி பிரசாத் வர்மா நேற்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதால் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முழுக்க முழுக்க ராகுல் காந்திதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் ஒருசில முக்கிய கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோர்களிடம் இருந்த மக்களை கவரும் திட்டமோ, அணுகுமுறையோ ராகுல்காந்தியிடம் சிறிதும் இல்லை என்றும், அவரது தலைமையில் காங்கிரஸ் இயங்கினால் காங்கிரஸுக்கு மூடுவிழாதான் செய்யவேண்டும் என கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியை கட்சியில் இருந்து ஒழித்து கட்ட காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலர் முயற்சி மேற்கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பேனி பிரசாத் வர்மா திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இது ஒன்றும் பரம்பரை சொத்து இல்லை என்றும் அந்த ஒருசிலர் கூறி வருவதாக பேனி பிரசாத் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்