ராகுல் காந்தி ஒரு அரசியல் தலைவர் அல்ல; அவர் ஒரு கமிஷன் ஏஜென்ட். சுப்பிரமணியன் சுவாமி

ராகுல் காந்தி ஒரு அரசியல் தலைவர் அல்ல; அவர் ஒரு கமிஷன் ஏஜென்ட். சுப்பிரமணியன் சுவாமி
swamy
சமீபத்தில் ராகுல்காந்தி ஒரு பிரிட்டன் பிரஜை என அதிரடி குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே உலகின் பெரிய நிறுவனங்களின் கமிஷன் ஏஜென்ட்டுகள் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது காங்கிரஸ் தரப்பை ஆத்திரமடைய செய்துள்ளது.

அகமதாபாத் நகரில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, “ராகுல் காந்தி ஒரு அரசியல் தலைவர் அல்ல; அவர் ஒரு கமிஷன் ஏஜென்ட். காங்கிரஸ் தலைவர்கள் எல்லோருமே கமிஷன் ஏஜன்ட்டுகள்தான். கமிஷன் பெறுவதற்காகவே ராகுல் பல கம்பெனிகளை தொடங்கினார். அவருக்கு துருக்கி உட்பட பிற நாடுகளில் குடியுரிமை உள்ளதா என்பது குறித்து விசாரிப்பேன். காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலின் சொத்து மட்டும் 2.50 லட்சம் கோடி ரூபாய். இது நாட்டின் வருமான வரியை விட அதிகம்” என்றார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, ‘‘பீகார் தேர்தலில் அவமான தோல்வியடைந்ததாலும், உட்கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும் வெறுப்படைந்துள்ள பாஜக,   சுப்பிரமணியன் சுவாமி  மூலம் கண்மூடித்தனமாகச்  சேற்றை வாரி வீசுகிறது’’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply