காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்த அக்கட்சியினர் பயப்படுவதாகவும் நரேந்திர மோடியின் செல்வாக்கை கண்டு தோல்வி பயத்தில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றும் பாரதியஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுஷ்மாஸ்வராஜ் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முடிந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்காமல் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை மட்டும் காங்கிரஸ் அறிவித்தது. ராகுல் காந்தியை தலைமையிலான இந்த குழுவில் குலாம்நபிஆசாத், ஜோகிர்ஆதித்யசிந்தியா, நந்தீப்சூரஜ்வாலா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த சுஷ்மாஸ்வராஜ், நரேந்திரமோடியின் செல்வாக்கை கண்டுபயந்துதான் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சுஷ்மாஸ்வராஜின் கருத்தை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, ராகுல்காந்தியின் செல்வாக்கு குறித்து நாடே அறிந்திருக்கும்போது, சுஷ்மாவுக்கு மட்டும் அது தெரியாமல் போனது வியப்புதான் என்று கூறியுள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாக ராகுல்காந்திக்கு அடுத்த ப்ரியங்காகாந்தியையும் களத்தில் இறக்கிவிட சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்திக்கு அனைத்து வகையிலும் உதவி செய்வதற்கு ப்ரியங்காகாந்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.