சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராகுல்காந்தி மீது பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து ராகுல்காந்தி விளக்கம் ஒன்றை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஜஹாங்கீர்பூரி பகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ராகுல்காந்தி கூறியதாவது:
”ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, ஆதிவாசி மக்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்கள் பகுதிகளில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். ஏழைகளுக்காக பணியாற்றுங்கள். பணக்காரர்களுக்காக பணியாற்றாதீர்கள் என்று மட்டுமே நான் கூறினேன். அவரது துறையில் நான் தலையிடவில்லை. ஆனால், மொடி ஜெயந்தியை காங்கிரசுக்கு எதிராக தூண்டி விடுகிறார்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.