திமுகவுடன் கூட்டணி. ஓகே சொன்ன ராகுல்காந்தி
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புக்கொண்டு விட்டதாகவும், இந்த கூட்டணியில் தேமுதிகவையும் இணைத்தால் அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த திருநாவுக்கரசர் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் திமுகதான் என்றும், திமுகவும் காங்கிரஸ் உடனான கூட்டணியை விரும்பித்தான் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, திமுகவுடனான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து அதிக தொகுதிகள் திமுகவிடம் இருந்து வாங்க பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கூட்டணியில் அடுத்தகட்டமாக தேமுதிகவை இழுக்க திமுக மேலிடம் தயாராகி வருவதாகவும், திமுக-காங்கிரஸ் மற்றும் தேமுதிக இணையும் இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பலமுள்ள கூட்டணியாக இருக்கும் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் முதலமைச்சர் கனவில் இருக்கும் விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரியவரும்